பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில் பெண் காவலரை தாக்கி அவமானப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி மீது பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, காயப்படுத்துதல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட புகார்கள் இருந்ததால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏப்ரல் 21 ஆம் தேதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித் சிங் பனேசர் மற்றும் மற்றொரு காவல்துறை அதிகாரியுடன் அரசு வாகனத்தில் குவஹாத்தி விமான நிலையத்திலிருந்து கோக்ரஜாருக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள ஜிக்னேஷ் மேவானியின் வழக்கறிஞர் ஆங்ஷுமன் போரா, ஜிக்னேஷ்க்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொடூரமானவை என்றும், அவர் மூன்று நாட்கள் காவலில் இருந்தபோதும் அல்லது அவரது பிணை கோரி கோக்ரஜார் நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட நேரத்திலும் இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
கோக்ரஜார் நீதித்துறை மாஜிஸ்திரேட் பாவ்னா ககோடி, பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட் செய்த்து தொடர்பான வழக்கில் இரண்டு ஜாமீன்களுடன் ரூ.30,000 பத்திரத்தை வழங்க அவருக்கு பிணை வழங்கினார். பின்னர் மேலே குறிப்பிட்ட வழக்கில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளது.
Source: newindianexpress
Governor RN Ravi க்கு எதிராக கர்ஜித்த Tamilnadu Assembly
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.