Aran Sei

தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்

4 டி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜகவில் சேருவதற்கு பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து நாளை (நவம்பர் 25) நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆளுங்கட்சியாக இருக்கிறது. கடந்த மாதம், அந்த கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்த 3 பேர், பாஜகவில் சேர்ந்தால் தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோகித் ரெட்டி அளித்த புகாரின் பேரில், ராமச்சந்திர பாரதி, நந்தகுமார், சிம்மயாஜி சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

‘பாஜகவில் சேருமாறு என்னை அணுகினார்கள்’ – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை தெலுங்கானா மாநில அரசு அமைத்தது. அக்குழு தனது விசாரணை அடிப்படையில், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷை குற்றவாளியாக சேர்த்துள்ளது. அவருடன் கேரளாவை சேர்ந்த ஜக்கு சாமி, துஷார் வெல்லபள்ளி மற்றும் பி.சீனிவாஸ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு இதை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சந்தோஷ் உள்பட 4 பேருக்கு சிறப்புப் புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சீனிவாஸ் மட்டும் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து, தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், பி.எல்.சந்தோஷுக்கு சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், நாளை (சனிக்கிழமை) அல்லது நவம்பர் 28-ம் தேதியோ விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளது.

Source : NDTV

ஜல்சா கட்சியின் பேக்கரி டீலிங் | (ஆ)பாசமலர் சூர்யா டைசியின் உருட்டு | Aransei Roast | Annamalaibjp

தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்