புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ரகளை செய்ய முயன்ற பாஜகவினர் மீது வழக்கு பதியாமல் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் கருணாநிதியி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
“அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த 5 வழக்கறிஞர்கள், வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பிரச்னை செய்துள்ளனர். இந்தியாவிலேயே பாஜக அரசு போன்ற மோசமான கட்சி இல்லை. எங்கேயாவது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர்கள் அரசியல் செய்து வருகின்றனர்.
”நடந்த சம்பவத்திற்கு பாஜக வழக்கறிஞர்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். காவல்துறையினரின் மெத்தனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் இன்று தமிழ்நாட்டில் எங்கேயாவது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களுடைய கணக்கு ஒருபோதும் நிறைவேறாது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source: Oneindia Tamil
Johnny Depp – Amber Heard Case இன் முழு பின்னணி இது தான் | Dr Shalini Interview | Men Too
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.