Aran Sei

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம்

ல்லையின் மற்றொரு பக்கத்தில் இருக்கும் தங்களது உறவினர்களைச் சந்திக்க அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள்,  ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிரஸ் என்களவே பகுதியில் இருந்து கண்டாகர் பகுதிக்குப் பேரணியாக சென்ற பெண்கள், தங்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும், எல்லையை தாண்டி செல்ல அனுமதி வழங்கக் கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நாங்கள் காஷ்மீரி (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்த) ஆண்களைத் திருமணம் செய்ததில் தவறேதும் இல்லை. அவர்கள் இந்தியாவின் குடிமகன்கள். நாங்கள் எங்களின் சம உரிமையை கோருகிறோம்” எனப் போராட்டத்தில் பங்கேற்ற சாய்ரா கூறியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

திஷா ரவியின் துணிவு இந்தியாவின் மனசாட்சியை உலுக்கட்டும் – அபூர்வானந்த்

”எங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசாங்கம் எங்களை நாடு கடத்த வேண்டும். நாங்கள் பயண ஆவணங்களைக் கோருகிறோம்.அதை வைத்துத் தான் நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியும்” எனப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த மற்றோரு பெண் கூறியிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பாகிஸ்தானிலிருந்து வந்த அட்னான் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்தபிறகும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் தீவிரவாதிகள்போல நடத்தப்படுகிறோம்” என அந்த பெண்கள் கூறியதாய தி இந்து குறிப்பிட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடிக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் – உத்தர பிரதேச விவசாய தலைவர்

மற்றொரு போராட்டக்காரரான தோய்பா, எங்களுக்கு எந்த அடையாளமுமின்றி விட்டுவிட்டார்கள் என்றும், “எங்களுக்குக் குடும்ப அட்டைகள் இல்லை, எங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளியில் பயில அனுமதியில்லை” எனக் கூறியதாக, அதில் தி இந்து தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2010 ஆம் ஆண்டு புனர்வாழ்வு கொள்கை வெளியானதில் இருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 150 பெண்கள், தங்கள் கணவர்களுடன் (முன்னாள் போராளிகள்), காஷ்மீர் பகுதிக்குக் குடியேறி இருப்பதாக, தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்