மகாராஷ்ட்ரா மாநிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஜீவன்விரத்தி புரஸ்கார் (வாழ்நாள் சாதனையாளர்) விருது, மராத்தியின் முன்னணி கவிஞரான யஷ்வந்த் மனோகருக்கு வழங்கப்பட இருந்தது. இந்த விருதை இலக்கிய அமைப்பான ‘விதார்பா சாகித்ய சங்கம் (விஎஸ்எஸ்)’ அவருக்கு அளிக்கவிருந்தது.
விருது வழங்கும் விழா, விஎஸ்எஸ்-ன் தலைமையகமான ‘ராங் ஷரதா’ அரங்கத்தில் நடைபெற திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், விருது வழங்கும் தினத்தன்று, விழாவின் நாயகனான யஷ்வந்த மனோகர் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக அவர், விதார்பா சாகித்ய சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ”என்னுடைய சிந்தனைக்கும் கொள்கைக்கும் மதிப்பளித்து, விருது வழங்கும் நடைமுறையை மாற்றும் என நினைத்தேன். ஆனால் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கண்டிப்பாக மேடையில் சரஸ்வதி தேவியின் உருவப்படம் இடம்பெறும் என கூறினார்கள். இதே காரணத்திற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு விருதுகளை நான் ஏற்க மறுத்துள்ளேன். இலக்கியத்தில் மதம் நுழைவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே இந்த விருதை நான் ஏற்க மறுக்கிறேன்” என அவர் கூறியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
“அமைச்சரிடம் விருது வாங்க மனசாட்சி அனுமதிக்கவில்லை” – விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானி
சரஸ்வதி தேவியின் உருவப்படம் சுரண்டலின் குறியீடு என விமர்சித்துள்ள யஷ்வந்த் மனோக, சரஸ்வதி தேவி என்கிற குறியீடு தான் பெண்களையும், சூத்திரர்களையும் கல்வி கற்பதில் இருந்தும், அறிவுசார் தேடலில் இருந்தும் தள்ளி வைத்துள்ளது என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளதாக ஃப்ரி பிரஸ் ஜர்னல் கூறியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!
”என் வாழ்நாள் முழுவதும் நான் கொண்டுள்ள சிந்தனைகளையும், மதிப்புகளையும், எழுத்துக்களையும் ஒரு விருதுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது. அதனால் தான் விருதை வேண்டாமென்று அறிவித்தேன்” என்றும் “இந்த விருதை நான் பெற்றால், என் வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்
சாவித்ரி பாய் பூலே போல், பெண்களின் கல்விக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட எண்ணற்ற நபர்களை தெரியும் என கூறியுள்ள யஷ்வந்த் மனோகர், பெண்கள் முன்னேற்றத்தில் சரஸ்வதியின் பங்கு என்ன என்ற கூறினால், எனது முடிவை மறுபரிசீலனை செய்கிறேன் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளதாக ஃப்ரி பிரஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர்
அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைப்பதற்கு பதிலாக, சாவித்ரி பாய் பூலேவின் புகைப்படத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலையும் வைக்க வேண்டும் என்று யஷ்வந்த் மனோகர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், மகாராஷ்ட்ரா அரசாங்கம் ஆகியவை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.