Aran Sei

குஜராத் கசாப்புக்கடைக்காரர், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பிரதமர் மோடி – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்

குஜராத் கசாப்புக்கடைக்காரர் மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை அமைச்சரும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று (டிசம்பர் 15) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.

‘இந்துபோபியா’வை எதிர்த்து நாம் போராட வேண்டும் – இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர்

இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்று கருத்து தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் (மோடி) வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை அமைச்சருமான (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்.

காலத்தால் ஆறாத வடு: நாஜிக்கள் செய்த படுகொலையின் நினைவு நாள்

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Source : the print

Annamalai honey trap technique Exposed | Amar Prasad | Gayathri Raghuram | Trichy Surya siva | Daisy

குஜராத் கசாப்புக்கடைக்காரர், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பிரதமர் மோடி – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்