சாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்தி, முக்குலத்தோர் வாக்குகளை குறிவைக்கவே பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருகிறார் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கம் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ம் தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்
பசும்பொன் முத்துராமலிங்கரின் குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருவதாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் பங்கேற்ற பின் எம்.பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “மோடி, பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதுதான் தேவர் குருபூஜைக்கு வர வேண்டும் என்று புரிந்ததா?. தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியலிருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாக கூறி, அதனை நிறைவேற்றாமல் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தேவர் குரு பூஜையில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தென் மாவட்ட மக்கள் பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.