பாஜக- சங் பரிவார் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர். இதனால், பயம், வெறுப்புணர்வுமே நாட்டில் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதையும், அவற்றின் கருத்துகளை அறிந்து கொள்வதையும் ஒன்றிய அரசு விரும்புவதில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதிகார ஆட்சி செய்யும் பிரதமருக்கு 10 கேள்விகள் – ராகுல்காந்தி விமர்சனம்
மக்களிடம் பயமும் வெறுப்புணர்வும் அதிகரித்துள்ள நிலையில், மக்களிடம் நேரடியாக சென்று எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதுதான் ஒரே வழியாக உள்ளது. உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ளக் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அந்த வகையில்தான், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளது. இது, மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்துக் கேட்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.
பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை பயத்தையும் வெறுப்பையும் பரப்பி நாட்டை பலவீனமாக்கி வருகின்றன. இதனால், பணவீக்கமும், வேலை வாய்ப்பின்மையும் நாட்டில் அதி கரித்துள்ளது. இது, இந்தியாவுக்கு எந்த பயனையும் தராது. ஆனால், சீனா, பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும்.
சீனாவின் ஊடுருவலும் பிரதமரின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது – ராகுல்காந்தி
மேலும், பாஜக ஆட்சியில் ஊடகம், நீதித் துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து முக்கிய ஜனநாயக அமைப்புகளும் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இவற்றில் ஒன்றிய அரசின் தலையீடு மிக அதிக அளவில் காணப்படுகிறது.
பாஜக அரசின் வெறுப்புணர்வு செயல்பாட்டால் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். அதற்காக மட்டுமே, பாஜக பணியாற்றி வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Source : indianexpress
கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.