Aran Sei

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்து மதகுரு

தக் குழுக்களின் உரிமைகளை வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் மீறுவதாக கூறி அதை நீக்க வேண்டும் என்று மதுராவைச் சேர்ந்த தேவகிநாதான் தாக்கூர் என்கிற மதகுரு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட 1991 சட்டம், ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த மத தலத்தின் தன்மையைப் பாதுகாக்கிறது. அடிப்படை அம்சமான நீதித்துறை மறுஆய்வுக்கான தீர்வைத் தடுப்பதன் மூலம் ஒன்றிய அரசு தனது சட்டமியற்றும் அதிகாரத்தை மீறியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை சொந்தம் கொண்டாட உரிமையுள்ளவர்கள் திராவிடர்களும் பழங்குடிகளும்தான் – ஓவைசி

”இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட காயம் மிகவும் பெரியது. ஏனெனில் சட்டத்தின் 2, 3, 4 ஆகிய பிரிவுகள் நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையைப் பறித்துள்ளது.  இதனால் நீதித்துறை தீர்வுக்கான உரிமை மூடப்பட்டது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்துக்கள் கிருஷ்ணரின் பிறப்பிடத்தை மீட்டெடுப்பதற்காகப் போராடுகிறார்கள்.  ஆனால் சட்டம் இயற்றும்போது, ​​​​அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த இடத்தை ஒன்றிய அரசு விலக்கியுள்ளது. ஆனால் மதுராவில் உள்ள கிருஷ்ணரின் பிறந்த இடத்தை அல்ல, இரண்டும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்ட 30,000 கோயில்களை திரும்ப பெறுவோம்: ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கருத்து

1991-ம் ஆண்டுச் சட்டத்தை எதிர்த்துப் பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 2021 இல், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் இந்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். முன்னதாக, ஜூன் 2020 இல், ஒரு இந்து குழு இதே போன்ற மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Source: Thenewindianexpress

கேள்வியை எதிர்கொள்ளும் திராணி இல்லாத Annamalai

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்து மதகுரு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்