மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான ஶ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பிற தனியார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மனுவை விசாரித்த மதுரா நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் பிரிவு 4(3) (பி) பிரிவுகளின் கீழ், இந்த சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வழிபாட்டாளர் ஒரு தெய்வத்தின் நண்பராக இருந்து வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரா மற்றும் காசி கோவில்கள் தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வழிபாட்டுச் சட்டம் 1991 குறித்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் கீழமை நீதிமன்றங்கள் தன்னிச்சையாக விளக்கங்கள் அளிக்கும் என்று ஷாஹி இத்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரா ஷாஹி இத்கா மசூதியை அகற்ற கோரும் மனு: விசாரணைக்கு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் முடிவு
ஶ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் சேவ் சஸன்ஸ்தான் மற்றும் ஷாஹி இத்கா இடையே 1968 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் போலியானது. இது 1974 ஆண்டு ஒரு சமரத்திற்கு வழிவகுத்தது” என்று கோவில் தரப்பில் தாக்கல் செய்யபப்ட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில், அறக்கட்டளையின் மதிப்புமிக்க சொத்தை, ஷாஹி இத்கா அறக்கட்டளைக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஶ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் சேவ் சஸன்ஸ்தான் மற்றும் ஷாஹி இத்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷாஹி இத்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மசூதிக்குள் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவிப்பு – மதுராவில் ஊரடங்கு அமல்
மாவட்ட நீதிபதி ராஜீவ் பாரதி, “1991 ஆண்டு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக இந்த சமரசம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுதான் சவாலான விஷயம். எனவே வழிபாட்டு தலங்கள் சட்டம் பிரிவு 4 (3) (பி)-ன்படி, இந்த வழக்கிற்கு இது பொருந்தாது.” என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2020-ல் தாக்கல் செய்யப்பட்ட மனு கிருஷ்ணரின் பக்தர்களாக இருந்து, உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒரு வழிபாட்டாளர், ஒரு தெய்வத்தின் அடுத்த நண்பராக இருந்து, தெய்வத்தின் மத உரிமைகளை மீட்டெடுக்க வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
Source: The Hindu
கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview | Thoothukudi Sterlite Issue Remembrance 2022
Janmabhoomi case
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.