Aran Sei

பெட்ரோல் டீசல் விலை விலையேற்றம்: உள்நாட்டு வளர்ச்சி என்பது இதுதானா? – ராகுல் காந்தி கேள்வி

credits : the indian express

இந்தியாவில் பெட்ரோல், டீடல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல், டீசலின் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 85.70 எனவும், மும்பையில் லிட்டருக்கு ரூ 92.28 எனவும் உயர்ந்துள்ளது. டெல்லியில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ 75.78 எனவும், மும்பையில் லிட்டருக்கு ரூ 82.66 எனவும் உயர்ந்துள்ளது.

’கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு’ – சோனியா காந்தி கண்டனம்

சவுதி எண்ணெய் உற்பத்தியை குறைத்ததால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆனால் வரிக்குறைப்பு தொடர்பாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போலி என்ஓசியில் 91 பெட்ரோல் நிலையங்கள் : நீதிபதிகள் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, கடந்த பிப்ரவரி மார்ச் மாதம் முதல் 1 மில்லியன் பீப்பாய்கள் கூடுதல் எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளனர். அதனால் தான் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மோடி ஜி உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளார். (அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வு) பொதுமக்கள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் அரசாங்கம் வரி வசூலிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

“பிரதமர் அவர்களே ! மக்களிடம் கொள்ளை அடிக்க வேண்டாம்”- ராகுல் காந்தி

அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகியவை ஜனவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு தினசரி விலை திருத்தத்தை மீண்டும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை விலையேற்றம்: உள்நாட்டு வளர்ச்சி என்பது இதுதானா? – ராகுல் காந்தி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்