Aran Sei

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

டந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை அடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்திற்கு ஒன்றியஅரசு ₹ 26,500 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்திடம் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தலையிட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம்’ – எலான் மஸ்க்கை எச்சரித்த சசி தரூர்

நாட்டில் உருவாகி வரும் கொரோரா நிலைமை குறித்து முதலமைச்சர்களுடனான மெய்நிகர் உரையாடலின் போது, பேசிய ​​பிரதமர் மோடி, கடந்த நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியைக் குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை என்றும் மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

வரிகளைக் குறைத்து அதன் பலனை குடிமக்களுக்கு மாற்றுமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக ஒன்றிய அரசின் பேச்சைக் கேட்கவில்லை, மேலும் அந்த மாநிலங்களின் குடிமக்கள் தொடர்ந்து சுமையாக உள்ளனர் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும், மாநில அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்ற பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தி தேசிய மொழியல்ல – சுதீப்புக்கும் அஜய் தேவ்கானுக்கும் ட்விட்டரில் வாக்குவாதம்

பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்றைய தினம் 1 லிட்டர் டீசல் மீதான மாநில வரி என்பது 22.37 ரூபாய். ஆனால் ஒன்றிய அரசின் டீசல் மீதான வரி என்பது 24.38 ரூபாயாக உள்ளதாகவும், எனவே ஒன்றிய அரசின் வரியே அதிகம் என விளக்கம் அளித்துள்ளார். இதேபோல் பெட்ரோல் மீதான மாநில வரி 32.55 ரூபாயாகவும், பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 31.58 ரூபாய் என தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு ஒன்றியஅரசு ₹ 26,500 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கை எரிவாயு ஊக்குவிக்கும் வகையில் 13.5%-லிருந்த வாட் வரி 3 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே  விளக்கம் அளித்துள்ளார்.

Source: ndtv

தமிழக அரசு மாரிதாஸை  கூப்பிட்டு விசாரிக்கணும். மாரிதாஸை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்