வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோராவின் சமர்ப்பிப்புகளை கவனத்தில் கொண்டு, இந்த மனுவை அவசர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். “நான் அதை பட்டியலிடுகிறேன். இரண்டு நாட்கள் காத்திருங்கள்,” என்று தலைமை நீதிபதி வி.என்.ரமணா கூறியுள்ளார்.
ஹிஜாப் அணிவது என்பது அரசியல் சாசனத்தின் 25வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படக் கூடிய அத்தியாவசியமான மதப் பழக்கத்தின் ஒரு பகுதி அல்ல என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், மனுதாரர், “மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறு செய்துவிட்டது. அதில் ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மனசாட்சிக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அனுமானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்
“ஹிஜாப் அணியும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமையின் வரம்பிற்கு உட்பட்டது என்பதை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மனசாட்சியின் சுதந்திரம் தனியுரிமைக்கான உரிமையின் ஒரு பகுதியாகும்” என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
Source: newindianexpress
Thirumavalavan ஐ சீண்டுறது நல்லதில்ல Annamalai | Ramasubramanian Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.