Aran Sei

தாஜ்மகாலை சேதப்படுத்திய இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆக்ரா நீதிமன்றத்தில் மனு

த்தரபிரதேச மாநில ஆக்ராவில் தாஜ்மகால் கட்டடம் சேதமடையக் காரணமாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக்ரா அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாஜ் மகால் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.  முகலாய மன்னன் ஷாஜகானால் கோயிலை இடித்துத் தாஜ் மகால் கட்டப்பட்டது என்ற புகார்கள் எழுந்தன.

தாஜ் மகாலின் அடித்தளத்தில் பல வருடங்களாக மூடப்பட்டுள்ள உள்ள 22 அறைகளை திறந்து அவற்றின் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உத்தரபிரதேச உயர்நீதிமன்றத்தின் அலகாபாத் நீதிமன்ற லக்னோ அமர்வு தள்ளுபடி செய்தது.

தாஜ்மகால் அமைந்திருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது – பாஜக எம்.பி தியா குமாரி கருத்து

இந்நிலையில், தாஜ்மகால் தொடர்பாக புதிய வழக்கு தொடர்ப்பட்டது. தாஜ்மகால் சேதமடைந்தது தொடர்பாக அதை நிர்வகிக்கும் ஏஎஸ்ஐயின் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆக்ராவைச் சேர்ந்த உமேஷ் சந்த் வர்மா தாக்கல் செய்த மனு ஜூலை 16 தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

‘தாஜ்மகாலுக்கு ராம் மகால் என்று பெயர் மாற்றப்படும்’ – பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

”தாஜ் மகாலின் உள்ளே ஷாஜகான் மற்றும் மும்தாஜின் சமாதிகள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஸ் விழா நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த மூன்று தினங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நாட்களில் தாஜ்மகாலின் கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அவர்கள் சேதப்படுத்திகின்றனர். கட்டடம் சேதமடைந்ததற்கு அதற்குப் பொறுப்பான இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: இந்தியத் தொல்லியல் துறை தகவல்

தாஜ்மகாலை சுற்றியிருக்கும் 500 மீட்டர் சுற்றளவு பகுதிகளை பாதுகாப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டிய மனுதாரர், ஷாஜகான் உருஸ் திருவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஆண்டுதோறும் ஷாஜகான் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

Source: The Hindu Tamil 

 

 

தாஜ்மகாலை சேதப்படுத்திய இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆக்ரா நீதிமன்றத்தில் மனு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்