டிக்டாக் உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு நிரந்தரமாக தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில், இந்தியாவிற்கும் சீன நாட்டு ராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட எல்லை பிரச்னை காரணமாக, சீன நிறுவனமான டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகள் இந்தியாவில் செயல்பட, கடந்த ஜூன் மாதம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடைவித்திருந்தது. தற்போது அந்த செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட செயலிகள், அவர்களின் பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிமனித தரவுகளும் அவற்றின் பயன்பாடு குறித்தும், அந்த நிறுவனங்கள் அளித்த பதில் மத்திய அரசுக்கு திருப்தியளிக்காததால், அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
டிக்டாக்கிற்கு பதில் இனி ‘யூட்யூப் ஷார்ட்ஸ்’. கூகுளின் புதிய அறிமுகம்
2020 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 200 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. பப்ஜி உள்ளிட்ட விளையாட்டு செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், ‘பப்ஜி மொபைல் இந்தியா’ என்ற பெயரில் இந்தியாவிற்கென புதிய வடிவத்தை கொண்டுவர, பப்ஜி நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதன் மறு வருகைக்கு மத்திய அரசு அனுமதியை மறுத்துள்ளது.
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்
இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, அந்நிறுவனத்தின் பன்னாட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக என்டிடிவி தெரிவத்துள்ளது.
தற்போது பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஊழியர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.