மாணவர்கள் அரசியல் விவாதங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும் பொதுக் பள்ளிக்கான மாநில மேடை நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் தலைவர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை, மக்களாட்சி மாண்புகளுக்கு எதிராகவும், மாணவர்களின் கல்வியியல் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையாகவும் அமைந்திருந்ததால், சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வியியல் சுதந்திரத்தை மதித்து, மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பெரியார் பல்கலைக்கழகம் தனது 27.5.2022 தேதியிட்ட சுற்றறிக்கையை முழுமையாக விலக்கிக் கொண்டதாக இன்றைய செய்தித் தாளில் வெளிவந்த செய்தி மூலம் அறிகிறோம்.
பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் விவாதத்தில் ஈடுபட தடை – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்
மக்களாட்சி மாண்புகளுக்கு மதிப்பளித்து சுற்றறிக்கையை திரும்பப் பெற்ற பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் குறிப்பாக பல்கலைக் கழக துணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
பல்கலைக்கழகம் சுற்றறிக்கையை திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் அவர்களுக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்கள் கோரிக்கைக்கு ஆதரவாக குரலெழுப்பிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவர்கள் தங்களது பொறுப்புணர்ந்து, அரசும், பொதுமக்களும் மாணவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு, கல்வியியல் செயல்பாட்டிற்கு எத்தகைய இடையூறும் ஏற்படா வகையில் மக்கள் நலன் சார்ந்து, மதச் சார்பற்ற சமதர்ம ஜனநாயக் குடியரசாக இந்தியா நிலைத்து உயர்ந்தோங்க தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மாணவர் அமைப்புகளைக் கோருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Johnny Depp – Amber Heard Case இன் முழு பின்னணி இது தான் | Dr Shalini Interview | Men Too
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.