கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை ஜனவரி 8 ஆம் தேதி இரவு, மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்தனர். இதனையொட்டி காவல்துறை நடத்திய விசாரணையில் இந்து முன்னணியைச் சேர்ந்த அருண் கார்த்திக், மோகன்ராஜ் என்கிற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்த திமுகவினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறை சிலை அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நள்ளிரவில் 2 பேர் பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்துக் காவி சாயம் பூசியதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளலூர் பகுதியின் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவரையும் 15 நாள் காவலில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஜனவரி 9 பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.