ஸ்டான் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது என பேரறிவாழனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “அடிப்படை தேவைகளுக்கே அல்லாடும் சிறைசூழல் கொண்ட அமைப்பில் சிக்குண்டு, பழங்குடியினர், ஒடுக்கப்பட்டோருக்காக வாழ்வை அர்பணித்த அய்யா ஸ்டான் சுவாமி அவர்கள் மரணம் மிகவும் வேதனை தருகிறது.
இனி ஒரு மனிதனுக்கு இது நிகழ்ந்துவிட கூடாது என்பதே 30 ஆண்டுகள் இதே சூழலில் பயணிக்கும் என் பெருங்கனவு.” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி, மகாராஷ்டிராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஸ்டான் சுவாமி, நேற்று (ஜூலை 5) மதியம் 1.30 அளவில் உயிரிழந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.