Aran Sei

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 142வது சட்டப்பிரிவின் கீழ் நிரந்தரமாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

மே 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்யப்பட்டனர்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய  கடிதம் – தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இதில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. பின்னர், 2014 ஆண்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருதால், அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யக் கோரி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், முடிவெடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு: ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவு எடுப்போம் – உச்ச நீதிமன்றம் கருத்து

மனுவை விசாரித்த நீதிமன்றம் பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் 9 தேதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மனு மீதான இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்பு பிரிவு 142 கீழ் பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் வழக்கில் குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

சட்டப்பிரிவு 161-ன் கீழ் பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆளுநர் காலதாமதம் செய்வதே விடுதலை செய்ய வேண்டும் என்று கருதியதற்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உங்க வீட்டு சாக்கடைய நாங்க தான் அள்ளுறோம் எங்களுக்காக பேசுங்க CMWSSB Protest | Thirumavalavan | VCK

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்