கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார் மாநில வருவாய்த்துறை அமைச்சர் அலோக் மேதா பேசியுள்ளார்.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அலோக் மேதா, ஆங்கிலேய அரசின் ஏஜெண்டுகளாக இருந்த நாட்டின் 10 விழுக்காடு மக்கள் தங்கள் உத்தரவுகளை தற்போது 90 விழுக்காடு மக்களை உள்ளடக்கிய பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பக்கம் திருப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
ஜக்தேவ் பாபுவால் (பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர்) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட 90 விழுக்காடு மக்கள் முதலில் ஆங்கிலேய அரசினால் சுரண்டப்பட்டனர். பின்னர் அவர்களின் ஏஜெண்டுகளான 10 விழுக்காடு மக்களால் சுரண்டப்பட்டனர்’ என்று அவர் கூறியுள்ளார்.
Rangaraj Pandey speech in Brahmin association meeting sparked row | sathyaprabhu interview | Sudras
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.