ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்பில் உள்ள மக்களை காலி செய்ய சொன்னதால் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இது புறம்போக்கு நிலம், சதுப்பு நிலம் என்று சொல்லப்படுவதால் 2015 ஆம் ஆண்டு சேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள 10 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
இப்பிரச்சினை குறித்து ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் அரண்செய்யிடம் பேசியபோது,கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 10 வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. மேலும், அதில் குடியிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. தேர்தல் பரப்புரையின்போது நிலம் காப்பாற்றித்தரப்படும் என்று திமுகவினர் உறுதியளித்தனர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரவிந்த் ரமேஷ் “நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். தற்போது வீட்டைக் காலி செய்யுங்கள்” என்று தெரிவித்தார். தேர்தல் பரப்புரையின்போது அவர் சொன்னது வேறு தற்போது நடந்துகொள்வது வேறு என்று சதீஷ் குமார் கூறினார்.
மேலும், அவர் நம்மிடம் கூறும்போது, இங்கிருப்பவர்கள் தண்ணீர் வரி, மின்கட்டனம், நில வரி எல்லாம் செலுத்தியுள்ளார்கள். இத்தனை இருந்து மக்களை வெளியேற்றுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். இது நீதிமன்றத்தின் நடவடிக்கை என்று ஆளும் தரப்பு சமாளிக்கிறது என்றும் கூறினார்.
இங்கு சில தனியார் பள்ளிக்கூடங்கள், வனிக கட்டடங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே இருக்கின்றன. அவை யாவும் சதுப்புநிலம் என்கிற நிர்வாக ஒழுங்குக்குள் வராதா என்றும் சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார். கண்ணகி நகர், செம்மஞ்சேரி என்று மக்களைத் தூக்கி எறியாமல் அருகிலேயே அவர்களின் வாழ்விடத்தை அமைத்து தர வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு அரசு செவி சாய்த்து நிறைவேற்றி தரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.