Aran Sei

பெகாசிஸ் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

த்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பெகாசிஸ் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தி சமர்பித்தது.

நரேந்திர மோடி அரசை விமர்சிப்பவர்களை குறிவைத்து இந்த வேவு பார்க்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட ஊடகங்களின் கூட்டமைப்பு வெளிப்படுத்தியதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

பல தாமதங்களுக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் ரகசியமாகவே உள்ளன.

பெகாசிஸ் மென்பொருளை பயன்படுத்தினாரா சந்திரபாபு நாயுடு? – விசாரணை மேற்கொள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை

ஆகஸ்ட் 26 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு பட்டியலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 2021ல், குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தேச பாதுகாப்பு என்ற காரணத்தை காட்டி பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான அந்த குழுவில், காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவின் அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பேராசிரியர் பி. பிரபஹரன், மும்பை ஐஐடியின் இணை பேராசிரியர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Source: The Wire

‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் உருவான கதை | Karumathur Manimaran | Viruman Song | Kanja Poovu Kannala

பெகாசிஸ் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்