இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகசிஸ் கொண்டு இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த 2021 அக்டோபர் 27 அன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் மேற்பார்வையில் நிபுணர் குழுவை அமைத்தது.
இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்திற்குச் சொந்தமான பெகசிஸ் மென்பொருளால் இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முக்கியப் பிரமுகர்கள் வேவு பார்க்கப்பட்டனர் என்று ஒரு உலகளாவிய ஊடகக் கூட்டமைப்பு செய்தி வெளியிட்டது.. அரசாங்க உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே NSO குழுமம் மென்பொருட்களை விற்பனை செய்கிறது என்று கூறியதை அடுத்து இந்த பிரச்சினை அரசியல் முக்கியத்தும் பெற்றது.
ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள், திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை பொது களத்தில் வெளியிடவில்லை. சில ஊடக அறிக்கைகளின்படி, விசாரணை செய்த போன்களில் பெகசிஸ் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் குழு கண்டுபிடிக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2022 இல், அனைத்து மாநிலத்தில் உள்ள காவல்துறை தலைமை காவல் அதிகாரிகளுக்கும் அக்குழு கடிதம் வழங்கியது.
ஸ்பைவேர் பற்றிய எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இஸ்ரேலிய ஸ்பைவேரை வாங்கியதா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் ஜே.கோபிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெகசிஸ் விவகாரம்: விசாரணைக்கான கால அளவை நீட்டித்த உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கு தொழில்நுட்ப பிரச்சினை அல்ல இது ஒரு அரசியலமைப்பு பிரச்சினை. இது எனது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது,” என்று ஜெகதீப் சோக்கர் கூறியுள்ளார்.
Souce: newindianexpress
Nakkeeran prakash explains Kallakurichi sakthi school issue | He raises doubt about new CCTV footage
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.