பெகசிஸ் உளவு செயலியின் வழியே இந்தியாவில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சம்ர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு பார்க்கும் மென்பொருள், உலகின் 10 நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளியுலகிற்கு தெரியவந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற அமைப்பும், ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. சுமார் 50,000 மொபைல் போன் எண்கள் அடங்கிய அந்த ஆவணத்தை, உலகின் தலைசிறந்த 17 பத்திரிகை நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஊடகமும், ஆம்னஸ்டி இண்டர் நேஷனலும் வழங்கின. பெகசிஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் அந்த எண்கள் பத்திரிகையாளர்கள், நாடுகளின் முன்னாள் இந்நாள் தலைவர்கள், அரசு குடும்பத்தைசேர்ந்தவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் மிக முக்கியமான நபர்களுக்கு சொந்தமானவை என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் பெகசிஸ் வளையத்தில் இருப்பதை தி வயர் இணையதளம் கண்டுபிடித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் உத்திவகுப்பாளர் பிரசாந்த கிஷோர் ஆகியோரின் பெயரும் உளவுப் பட்டியலில் இருந்ததாக உறுதி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண்ணும் அவருடைய உறவினர்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வந்தது. பீமா கோரேகான் வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ள 15 பேரில் 8 பேருடைய தொலைபேசிகளும் பெகசிஸ் மூலம் கண்காணிக்கப்பட்ருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
பெகசிஸ் பிரச்சினை நாடாளுமன்றம் வரை எதிரொலித்து. இதனால் உளவு பார்க்கப்பட்ட எண்களை ஆய்வு செய்ய ஒரு குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. இதற்காக கொடுக்க பட்ட கால ஆவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு தலைமையிலான தொழில்நுட்பக் குழு கூறும்போது, பெகசிஸ் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட நபர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
பாதிக்கப்பட்ட (உளவு பார்க்கப்பட்ட) 29 அலைப்பேசிகளை ஆய்வு செய்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு காலத்தை உச்ச நீதிமன்றம் நீட்டியுள்ளது. உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் எண்களை நான்கு வாரத்திற்குள் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உளவு பார்க்கப்பட்ட அலைப்பேசிகளைப் பரிசோதிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையும் இறுதி செய்யப்படும். மே மாத இறுதிக்குள் தொழில்நுட்பக் குழுவின் விசாரணை முடிவடையும், பின்னர், மேற்பார்வை செய்யும் நீதிமன்ற அமர்வின் கீழ் அறிக்கையை உருவாக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொழில்நுட்பக் குழுவின் செயல்முறை முடிந்த பிறகு, மேற்பார்வையிடும் நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும். மேற்பார்வை நீதிபதி அதன்பின் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலையில் ஆய்வுக் குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
Source: The New Indian Express
பாஜகவ எதிர்த்து எத்தனை போராட்டம் பண்ணீங்க Ks Alagiri ? Madukkur Ramalingam
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.