Aran Sei

அமைதியான முறையில் நடைபெற்ற விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆதரவு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று நாடு முழுவதும் “ரயில் ரோகோ (ரயில் மறியல்)” போராட்டம் நடத்தினர்.

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டெல்லி

ரயில் மறியல் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதியில் தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்ட களத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான திக்ரி எல்லையின் அருகே இருக்கும் 4 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கு, டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேஷன் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

”பாதுகாப்பு காரணங்களுக்காக, திக்ரி எல்லையில், பண்டிட் ஸ்ரீராம் சர்மா, பகதூர்கார்ஹ் நகர், ஹோசிங்கர் சிங் பிரிட்ஜ் பகுதிகளில் நுழைதல்/ வெளியேறுதல் முடக்கப்பட்டுள்ளதாக” மெட்ரோ ரயில் நிர்வாகம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

பஞ்சாப்

டெல்லி – லூதியானா – அமிர்தசரஸ் ரயில் பாதை மற்றும் மொஹாலியின் ஜலந்தர் பகுதியில் கண்டோன்மண்ட் – ஜம்மு ரயில் பாதைகளில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டம் மற்றும் பிகானீர் நகரத்தில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நான்கு மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வளர்ந்து வரும் 100 தலைவர்கள் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் – டைம்ஸ் பத்திரிகை அறிவிப்பு

ஹரியானா

விவசாயிகளின் ரயில் மறியல் போரட்டம் காரணமாக பல்வேறு ரயில் நிலைய பகுதிகளில், ரயில்வே காவல்துறை மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டதாக, அம்பாலா பிரிவு ரயில்வே மேலாளர் ஜி.எம்.சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஒரு ரயிலும் ரத்து செய்யப்படவில்லையென அவர் கூறியுள்ளார்.

கர்நாடகா

கர்நாடகாவில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் சிறிய அளவிலும், ராய்ச்சூர், பெலகாவி, தவாங்கரே பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவிலும் ரயில் மறியர் போராட்டம் நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில், எந்த எதிர்பாரா நிகழ்வும் நடைபெற்றவில்லை என்றும், ஏற்கனவே மாற்றப்பட்டிருந்த 25 ரயில்கள் தவிர, ஒரு சில ரயில்கள் மட்டுமே நிறுத்தப்பட்டதாகவும், அதைத் தவிர ரயில் போக்குவரத்து சீராக இருந்ததாக, வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Source : PTI   

அமைதியான முறையில் நடைபெற்ற விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்