Aran Sei

பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் – ப.சிதம்பரம் நம்பிக்கை

”மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களும் பிரபலமாகிவிட்டது என்பதை உணர்ந்துள்ளர்களா அல்லது அந்த சட்டத்தை எதிர்த்து சிறிய அளவிலான விவசாயிகளே போராடுகிறார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?” என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

”கருத்துரிமையை மறுக்க, இது இந்தியா அல்ல”: பாகிஸ்தான் நீதிபதி கருத்து; நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் – ப.சிதம்பரம்

இந்நிலையில், பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பாஜக படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தந்ல நடைபெற்ற அனைத்து மாநகராட்சிகளையும் (மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர், பதான்கோட், படாலா, பதீண்டா, மொஹாலி) காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

தீஷா ரவி கைது : எதேச்சதிகார அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

பஞ்சாபில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு ப.சிதம்பரம், “பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது. நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம் என்று மோடி அரசுக்கு நினைவுபடு்த்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி!” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், “இளைஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குரிமை இருக்கிறது. திஷா ரவி, நிகிடா ஜேக்கப் மற்றும் ஜவஹர்லால் பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக, எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும்” என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் (19.02.21), ”மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களும் பிரபலமாகிவிட்டது என்பதை உணர்ந்துள்ளர்களா அல்லது அந்த சட்டத்தை எதிர்த்து சிறிய அளவிலான விவசாயிகளே போராடுகிறார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?” என ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ”வெளியுறவுத்துறை அமைச்சகம் தன் நம்பகத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது, அரசாங்கத்தின் தவறான உள்நாட்டுக் கொள்கைகளால் மன்னிப்பு கோரும் அமைச்சகமாக மாறியுள்ளது” என ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

“பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கிய பட்ஜெட்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு

”விவசாயிகள் வாக்காளர்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், வேலையில்லாதவர்கள், மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆகிய அனைவருமே வாக்காளர்கள். அவர்களின் முறை வரும் பொழுது, அவர்களும் பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” என, பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் – ப.சிதம்பரம் நம்பிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்