”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்தை நாங்கள் ஆய்வு செய்யவோ அல்லது அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அன்மையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரித்துள்ள கொரோனில் மருந்து, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனா தடுப்பு மருந்து என்ற அங்கீகாரத்தை, ஆயுஷ் அமைச்சகம் வழங்கியிருப்பதாக அறிவித்தது.
கடந்த பிப்பிரவரி 19 ஆம் தேதி, டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமை தாங்கிய நிகழ்ச்சியில், கொரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
“உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களின் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை (CPP) கொரோனில் பெற்றுள்ளது.” என்று பதஞ்சலி தனது அறிக்கையில் தெரிவித்தது.
கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்
ஆயுஷ் அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொரோனில் மாத்திரையை, அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுதும் உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிவியல் பூர்வமாக இம்மருந்து சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அதற்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.
கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்
இதையடுத்து, அந்த மருந்தை, ‘எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்’ மருந்து மட்டும்தான் என்று, ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.
கடந்தாண்டு ஜனவரி மாதம், கொரோனாவிற்கான ஆயுர்வேத முறையிலான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பதாஞ்சலி நிறுவனம், கொரோனில் மருந்தை தயாரித்துள்ளது.
இயற்கை முறையிலான மருத்துவத்தின் அடிப்படையில் நியாயமான விலையில் இந்தச் சிகிச்சையை வழங்குவதன் வழியாக, கொரோனில் மனிதகுலத்திற்கே உதவியாக இருக்கும் என்று பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.
மேலும், பலர் கொரோனில் மருந்தின் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பிய போதிலும், உலக சுகாதார அமைப்பே தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்த பாபா ராம்தேவ், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை ஆய்வு செய்து, கொரோனில் மருந்தை 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமத்தை வழங்கியதாகவும் கூறியிருந்தார்.
.@WHO has not reviewed or certified the effectiveness of any traditional medicine for the treatment #COVID19.
— WHO South-East Asia (@WHOSEARO) February 19, 2021
இந்நிலையில் ”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மருந்தை தாங்கள் ஆய்வு செய்யவோ அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பதஞ்சலியின் கொரோனில் அங்கீகரிக்கப்பட்ட மருந்து எனும் சான்றிதழ், இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது. கொரோனில் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது அல்லது பரிந்துரைக்கப்பட்டது என்ற கூற்று தவறானது என இச்செய்தியின் உண்மைத்தன்மையை ஏஎல்டி நியூஸ் கண்டறிந்துள்ளது.
மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?
உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை சுயாதீனமாக வழங்குகின்றது. அதன் சின்னத்தை அங்கீகாரமற்ற முறையில் பயன்படுத்துவது சட்டவிரோத செயல் என்று ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.