Aran Sei

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில்நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) தாக்கல் செய்துள்ளார்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை பாஜக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் நடத்துவதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் தமிழ்நாடு அரசிற்கு இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாநில அரசை அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்து ஆலோசித்து விட்டுத் துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பது மரபாக இதுவரை இருந்து வந்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகச் செயல்பட்டு உயர்கல்வியை அளிக்கும் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடியை ஏற்படுத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்துங்கள் – கல்லூரி முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அறிவுறுத்தல்

குஜராத், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிற்கே உள்ளது. முக்கியமாகத் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கக் கூடாது என பூஜ்யம் ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில்நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்