Aran Sei

நாடாளுமன்றம் செயலிழந்துவிட்டது; ஜனநாயகம் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது – ப.சிதம்பரம் விமர்சனம்

Credit: Hindustan Times

நாடாளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருவதாகவும், இந்தியாவில் ஜனநாயகம் மூச்சு விடாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்றும், கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் அடக்கப்பட்டு, ஏமாந்துவிட்டன அல்லது கைப்பற்றப்பட்டன என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிடிஐக்கு அளித்த பேட்டியில், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸின் ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் ஸ்தாபன நாளுடன் இணைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்,

மேலும், ஆகஸ்ட் 5, 2019 அன்றுதான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது.  தீவிரமான பிரச்னையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

சென்னை: மதரீதியாக சர்ச்சை கருத்துக்கள் பதிவிட்டவர்  கைது

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் , ஜிஎஸ்டி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்காக காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு ஆடை அணிந்து நடத்திய போராட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் அடிக்கல் நாட்டியதன் ஓராண்டு நிறைவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பாஜக கூறியது மோசமான அரசியல் என்று தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கேள்விக்கு உள்ளாகி வரும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைமையை காப்பாற்றும் முயற்சிதான் ஆகஸ்ட் 5-ம் தேதி காங்கிரஸின் போராட்டம் என்ற பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டையும் சிதம்பரம் நிராகரித்துள்ளார்.

சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக வெறுப்பு பேச்சை ஏற்க கூடாது- உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

பணவீக்கம் , வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அக்னிபத் ஆகியவற்றிற்காக மட்ட்மே ஆகஸ்ட் 5 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம் .

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையானவர்கள் என்றும், அவர்களுக்கு கட்சியின் முழு ஆதரவும் உள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

Why RSS didn’t host National Flag for 50 years explained | Modi | BJP | Independence day | Kanagaraj

நாடாளுமன்றம் செயலிழந்துவிட்டது; ஜனநாயகம் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது – ப.சிதம்பரம் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்