Aran Sei

பாகிஸ்தான்: நூபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சிகள் அறிவிப்பு

பிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவைக் கண்டித்து பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் தெஹ்ரீக்-இ-லப்பைக் போன்ற இஸ்லாமிய கட்சிகள் பங்கேற்க உள்ளன.

முகமது நபியை விமர்சித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

மதியம் தொழுகைக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் செனட் உறுப்பினர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பேரணி நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையொட்டி இந்திய அரசு பாதுகாப்பு கோரியுள்ளது.

அரசு கட்டிடங்கள், முக்கிய சந்திப்புகள், பத்திரிகையாளர் மன்றங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

ஹைதராபாத், கராச்சி, லாகூர், முல்தான், முசாஃப்ராபாத், பேஷ்வர், குவெட்டா, ராவல்பிண்டி, சர்கோதா ஆகிய இடங்களில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போக்குவரத்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Source: Thenewindianexpress

இனப்படுகொலையை தூண்டினாரா Periyar? | Chola Nagarajan Interview

பாகிஸ்தான்: நூபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சிகள் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்