Aran Sei

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கு – குற்றவாளியை விடுவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

credits : ap

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கின் குற்றவாளி ஒமர் சயீத் ஷேக் என்பவரை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) பத்திரிகையின் தெற்காசிய செய்தியாளராக இருந்த டேனியல் பேர்ல், 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடத்தப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒமர் சயீத் ஷேக், கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தானின் சிந்த் மாகாண உயர் நீதிமன்றம், ஷேக் மற்றும் அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஃபஹத் நசீம், ஷேக் ஆதில், சல்மான் சாகிப் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரித்து, ஷேக்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்ததுடன், இருபது லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. ஷேக், பதினெட்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததால், ஏழு வருடம் காலம் அதிலிருந்து கழிக்கப்பட்டது. மற்ற மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

சிந்த் மாகாண உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மாகாண அரசும், டேனியல் பேர்லின் பெற்றோரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில், நால்வர் மீதும் பொது அமைதியை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை சிந்த் மாகாண அரசு சிறையில் அடைத்தது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி முஷிர் அலாம் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிந்த் மாகாண அரசின் மனுவை தள்ளுபடி செய்து, ஷேக்கை விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஒமர் சயீத் ஷேக்கின் விடுதலையை உறுதி செய்துள்ளது.

`வலதுசாரி சித்தாந்தத்தை நம்பித் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்’ – நியூலாந்து விசாரணை ஆணையம்

1999 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள், இந்தியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்றை (ஐசி 814), நேபாளத்தின் தலைகர் காத்மண்டுவில் இருந்து கடத்தி, ஆஃப்கானிஸ்தானின் காந்தகருக்கு கொண்டு சென்றனர்.

அதிலுள்ள பயணிகளை மீட்பதற்காக இந்தியா கடத்தல்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அப்போது இந்திய சிறையிலிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸர், முஸ்தக் அஹ்மது ஸர்கர் மற்றும் ஒமர் ச்யீது ஷேக்கை இந்திய அரசு விடுதலை செய்ய கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்

இந்த கோரிக்கை இந்திய அரசால் ஏற்கப்பட்டததையடுத்து, ஷேக் உட்பட மூவர், ஆஃப்கானிஸ்தானில், கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இங்கிலாந்து குடியுரிமை கொண்ட ஷேக், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கு – குற்றவாளியை விடுவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்