Aran Sei

‘இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ கவச உடை வழங்க பாகிஸ்தான் முடிவு’ – தொற்றுக்காலத்தில் துணை நிற்பதாக உறுதி

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய மக்களுடன் துணை நிற்கும் விதமாக, இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள், பிஐ பிஏபி கருவி (நுரையீரலுக்கு ஆக்சிஜனை தள்ளும் கருவி), டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ (தொற்றுத்தடுப்பு கவச உடை) போன்றவற்றை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது என்று அந்நாட்டின் வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 24) இரவு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய மக்களுடன் துணை நிற்கும் விதமாக, இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள், பிஐ பிஏபி கருவி (நுரையீரலுக்கு ஆக்சிஜனை தள்ளும் கருவி), டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ (தொற்றுத்தடுப்பு கவச உடை) மற்றும் அதை தொடர்புடைய சாதனங்களை  நிவாரண உதவிகளாக வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது.” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், “பாகிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து நிவாரணப் பொருட்களை விரைவாக வழங்க பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும். மேலும், தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை ஒத்துழைத்து எதிர்கொள்வதற்கான சாத்தியமான வழிகளையும் ஆராய முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ கவச உடை வழங்க பாகிஸ்தான் முடிவு’ – தொற்றுக்காலத்தில் துணை நிற்பதாக உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்