நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நமது நேசத்திற்குரிய முகமது நபி குறித்து இந்தியாவின் பாஜக தலைவர் புண்படுத்தும் வகையில் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் இந்தியா மத சுதந்திரங்களை மிதித்து, இஸ்லாமியர்களை துன்புறுத்துகிறது என்று மீண்டும் மீண்டும் கூறுகிறேன். உலக நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் பேசிய வெறுப்பூட்டும் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை பரப்பி அவர்களுக்கு எதிராக வன்முறையை மோடி அரசு வேண்டுமென்றே தூண்டி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில ஊடக பிரிவு தலைவர் நவீன் ஜிண்டாலை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
Source : india today
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.