தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள சுசித்ரா டப்பிங் கலைஞராகவும் ஆகவும் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்மையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் எந்த வித ஆதாரமுமின்றி குற்றம் சுமத்தி யூடியூப் காணொளியில் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து எந்த வித ஆதாரமும் இல்லாமல் யூடியூப்பில் நடிகைகள்பற்றிப் பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பயில்வான் ரங்க நாதனிடம் பேசியபோது, உரியப் பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுசி லீக்ஸ் மூலமாக எனது தொழில் பாதிப்படைந்து, மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் பயில்வான் ரங்க நாதன் தன்னை பற்றி அவதூறு கருத்து பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். ஆகவே உடனே பயில்வான் ரங்க நாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தனது புகாரில் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
Source : Puthiya Thalaimurai
ஆபத்தான RSS அஜெண்டா!! பலியாகும் இளைஞர்கள் !! #BoycottqatarAirways
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.