Aran Sei

’கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் பாஜக-வின் கொட்டம் அடங்கும்’ – ப.சிதம்பரம்

கேரளா மற்றும் தமிழகத் தேர்தலில் பாஜக தோற்றால் தான் அதன் ஆணவம் அடங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 23) மானாமதுரையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. அதிமுகவை 3 மாதங்களிலும், பாஜகவை 3 ஆண்டுகள் கழித்தும் தோற்கடிக்க வேண்டும். தேர்தலை அதிமுக, பாஜக அதிகார, பணப்பலத்துடனும், அதிகார துஷ்பிரயோகத்துடனும் சந்திக்க உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை என்றார்கள் அதை கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்கள் தடுத்து நிறுத்தின என்று சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம் “தற்போது கேரளா, தமிழகத்தில் தேர்தலில் பாஜக தோற்றால், அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும். இல்லாவிட்டால் பாஜகவின் ஆணவம், அகந்தையை அடக்க முடியாது.” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும், “ஒரு கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், நான் தான் நிரந்தர முதல்வர், நான் தான் நிரந்த பிரதமர் என்ற ஆணவம் வந்துவிடும். அமெரிக்கர்கள் புத்திசாலி அதனால் தான் 8 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்காத அளவிற்கு சட்டம் வைத்துள்ளனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச் செய்திகளுக்காக அறிவிப்புகள் விடும் பாஜக – ப.சிதம்பரம் விமர்சனம்

“பாஜகவை அகில இந்திய அளவில் எதிர்க்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. மதுரை எம்.பி கடிதம் எழுதினால், மத்திய அமைச்சர் இந்தியில் பதிலளிக்கிறார். தமிழக முதல்வர் தாயார் இறந்ததற்கு கூட அமித்ஷா இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் என்ன ஒரு ஆணவம்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி நிறுவனத்தை மைசூருவில் உள்ள பல மொழி நிறுவனத்தின் ஒரு இலக்காவாக சேர்க்க உள்ளனர் என்றும் “இதை ஏற்க முடியுமா? இந்தி அல்லாத பிற மொழியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கினர். ஆனால் சமஸ்கிருதத்திற்கு ரூ.1000 கோடி ஒக்கியுள்ளனர்.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

’கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் பாஜக-வின் கொட்டம் அடங்கும்’ –  ப.சிதம்பரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்