உடனடியாக குண்டுவீச்சை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவிடம் இந்தியா தைரியமாகவும் உறுதியாகவும் கோர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள ப.சிதம்பரம், “இந்திய அரசு தனது வாய் வார்த்தைகளில் மட்டும் செயல்படுவதை நிறுத்திவிட்டு, உக்ரைனின் முக்கிய நகரங்களில் குண்டுவீசுவதை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தம் தர வேண்டும். குண்டுவீச்சு நிறுத்தப்பட்டாலோ அல்லது இடைநிறுத்தப்பட்டாலோதான், உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
The Government of India should stop its verbal balancing act and sternly demand that Russia stop immediately the bombing of key cities in Ukraine.
If the bombing is stopped or paused, foreigners trapped in Ukraine may be able to leave the country.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 1, 2022
உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க இந்திய அரசு காலதாமதம் செய்தது என்றும் உக்ரைனில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று இந்தியர்களை நம்ப வைத்த விதத்தில் இந்திய அரசும் ஒரு குற்றவாளிதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்கள் பேராபத்தில் உள்ளன. உடனடியாக குண்டுவீச்சை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவிடம் இந்தியா தைரியமாகவும் உறுதியாகவும் கோர வேண்டும்” என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.