”மவுண்ட் கார்மல் கல்லூரியைச் சேர்ந்த 22 வயது மாணவரும், பருவநிலை செயற்பாட்டாளருமான திஷா ரவி நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறினால், அது இந்தியாவின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது” என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
தேசவிரோத சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று போலீஸ் கூறும் இந்த “டூல்-கிட்” என்பது உண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கட்டுரைகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதை பரப்புவதற்கு விரும்பும் யாருக்கும் உதவுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்று தி வயர் தெரிவிக்கிறது.
விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “
“டூல்-கிட் என்பது போராட்டங்களுக்காக தயாரிக்கப்படுவது, அது போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இயக்கத்தில் பங்கேற்க உதவுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டுவதன் மூலம் இயக்கத்தை வலுப்படுத்துகிறது” என்று தி வயர் விளக்கியிருந்தது. “ஒரு நீண்ட கால இயக்கத்தில், போராட்டத்தின் நியாயங்களை தெளிவுபடுத்தும் ஒரு துண்டறிக்கையின் புதிய வடிவம்” என்று டூல்-கிட்டை கருதலாம்” என்றும் அது கூறியிருந்தது.
“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
இந்த வழக்கின் கீழ் இந்தியாவில் பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான “எதிர்காலத்துக்கான வெள்ளிக் கிழமைகள் (Fridays for Future)” என்ற இயக்கத்தைத் உருவாக்கியவர்களில் ஒருவரான தீஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தீஷா ரவி கைதுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ”மவுண்ட் கார்மல் கல்லூரியைச் சேர்ந்த 22 வயது மாணவரும், காலநிலை செயற்பாட்டாளருமான திஷா ரவி நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறினால், அதுஇந்தியாவின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தகவல் தொகுப்பு, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை விட ஆபத்தானதா?” என அவர் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
यदि माउंट कार्मेल कॉलेज की 22 वर्षीया छात्रा और जलवायु कार्यकर्ता दिशा रवि देश के लिए खतरा बन गई है, तो भारत बहुत ही कमजोर बुनियाद पर खड़ा है।
चीनी सैनिकों द्वारा भारतीय क्षेत्र में घुसपैठ की तुलना में किसानों के विरोध का समर्थन करने के लिए लाया गया एक टूक किट अधिक खतरनाक है!— P. Chidambaram (@PChidambaram_IN) February 14, 2021
மேலும், ”இந்தியா ஒரு அபத்தமான நாடக மேடையாக மாறி வருகிறது, டெல்லி காவல்துறை ஒடுக்குமுறையாளர்களின் கருவியாக மாறியது வருத்தமளிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
“திஷா ரவி கைது செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், அனைத்து மாணவர்களும் இளைஞர்களும் இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தீஷா ரவி, “நான் விவசாயிகளை ஆதரிக்க மட்டும்தான் செய்தேன், ஏனென்றால் அவர்கள்தான் நமது எதிர்காலம், அவர்கள்தான் நமக்கு தேவையான உணவை வழங்குகிறார்கள், நாம் எல்லோருக்கும் உணவு அவசியமானது.” என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.