Aran Sei

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு – விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்

ன்றிய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே ஏற்றுமதி தடைக்கு காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் ‘‘பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை சந்திக்கும் நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு, கோதுமையை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என தெரிவித்திருந்தது.

வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் எண் இணைப்பு: விதிகள் விரைவில் வெளியிடப்படும் – இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

இந்தநிலையில், ஒன்றிய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒன்றிய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Source: Theindianexpress

தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு – விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்