Aran Sei

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

Credit: Hindustan Times

ந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது, அவ்வாறு செய்வது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்தார்.

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

”எல்லா வழிபாட்டுத் தலங்களும் அவை இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் நிலையையும் மாற்ற முயற்சிக்க கூடாது, அது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். இது போன்ற மோதல்களைத் தவிர்க்கவே நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நிறைவேற்றியது” என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Source: The Hindustan Times 

சீமான் போல சிந்தித்த ராஜபக்சே திவாலான இலங்கை | Nathan Interview | Srilanka Crisis | Seeman | NTK

 

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்