கொரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக தற்போது வரை 197 மரணமடைந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் இறந்த 70 பேர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அந்த குற்றசாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக இறந்தவர்கள் குறித்த தகவல்கள், மருத்துவமனை ஊழியர்கள் வழியாகவும், அப்பகுதியின் அதிகாரிகள் வழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.
We are recording deaths due to lack of oxygen all over India in this thread. This is an ongoing crisis, and recording its extent, even from media reports, may help. We are also building a database, so if you have any links please do share or add to this thread.
— Aditi Priya (@aditipriya_0301) May 5, 2021
மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் ஆய்வாளர் அதிதி பிரியா திரட்டிய பத்திரிகை செய்திகளின் வழியாகவும், உயிரிழப்புகள் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.