பாலின பாகுபாடு காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 99% வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 100 விழுக்காடு கிராமப்புற பெண்களும் 98 விழுக்காடு நகர்ப்புற பெண்களும் வேலை வாய்ப்புக்ளில், பணி இடங்களில் சமத்துவமின்மையை எதிர்க் கொள்கின்றனர்.
பெண்களைத் தவிர, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்துகள், பழங்குடிகள், மற்றும் இஸ்லாமியர்கள் போன்ற மத சிறுபான்மையினரும் வேலைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் விவசாய கடன்களை பெறுவதில் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயின் முதல் காலாண்டில் கிராமப்புறங்களில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் வேலையின்மை விழுக்காடு 17 ஆகவும் இஸ்லாமியர்களின் வேலையின்மை விழுக்காடு 31.4 ஆகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆண்களுக்கு நிகராக இருந்தாலும், சமூகம் மற்றும் முதலாளித்துவம் காரணமாக தொழிலாளர் சந்தையில் அதிகம் பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என அறிக்கை எடுத்துரைக்கிறது.
சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட 2.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதில் 83 சதவீதம் பாலின பாகுபாட்டினாலும் 95 சதவிகிதம் சாதாரண கூலித்தொழிலாளர்களான ஆண் , பெண் இருவரின் ஊதியம் சார்ந்த பாகுபாட்டினால் அமைகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வருமானத்தில் 91.1 சதவீத இடைவெளி பாகுபாடுகளால் மட்டுமே இருப்பதாக கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி
மேலும் கிராமப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட கிராமப்புற சுயதொழில் செய்யும் ஆண்கள் இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள். சாதாரண ஆண் தொழிலாளி பெண்களை விட மாதத்திற்கு ₹3,000 அதிகம் சம்பாதிக்கிறார்கள், இதில் 96 சதவீதம் பெண்களுக்கு பாலின பாகுபாடு காட்டப்படுவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கல்வி ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவர மாதிரியானது, தொழிலாளர் சந்தையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை விளக்குகிறது. பெண்களுக்கான ஊதியம் பாலின பாகுபாட்டால் 67 சதவிகிதம் உள்ளது. மீதமுள்ள 33 சதவிகிதம் கல்வி மற்றும் பணி அனுபவமின்மை பொருத்து அமைந்துள்ளது. எனவே அனைத்து பெண்களுக்கும் சம ஊதியம் மற்றும் வேலைக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான பயனுள்ள நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு ஆக்ஸ்பாம் இந்தியா அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.2004-05 முதல் 2019-20 வரையிலான வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் பற்றிய அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆணும் பெண்ணும் சமமாக தங்களது வேலையை தொடங்கினாலும் , பாலின பாகுபாடு காரணமாக பெண் பொருளாதாரத்தில் பின்நோக்கி தள்ளப்படுகிறாள். சமத்துவமின்மை , அனுபவமின்மை , கல்வித்தகுதி போலவே பாலின பாகுபாடும் பெண்களின் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது ஒரு ஆணும் பெண்ணும் சமமாக தங்களது வேலையை தொடங்கினாலும் , பாலின பாகுபாடு காரணமாக பெண் பொருளாதாரத்தில் பின்நோக்கி தள்ளப்படுகிறாள். சமத்துவமின்மை , அனுபவமின்மை , கல்வித்தகுதி போலவே பாலின பாகுபாடும் பெண்களின் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது
நகர்ப்புறங்களில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினரின் சராசரி வருமானம் ரூ. 15,312 இருக்குறது.. பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 20,346ஆக இருக்கிறது. அதாவது பட்டியலின மற்றும் பழங்குடியினரின் வருமானத்தை விட பொதுப் பிரிவினர் 33 சதவீதம் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று அறிக்கை கூறியுள்ளது.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நகர்ப்புற இஸ்லாமியர் மக்கள்தொகையில் 15.6 சதவீதம் பேர் வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் 2019-20 ஆம் ஆண்டில் இஸ்லாமியர் அல்லாதவர்களில் 23.3 சதவீதம் பேர் வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Suriya Krishnamurthy explains the historical contribution of Arignar Anna on him Birthday
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.