மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னாள் இருப்பவர்கள்தான் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிப்ரவரி 3 அன்று உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட அசாதுதீன் ஒவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன் தினம்(பிப்ரவரி 4) ஒன்றிய உள்துறை அமைச்சகம் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் வகை உயர் பாதுகாப்பை வழங்க முன்வந்தது. ஆனால், மக்களவையில் பேசிய அசாதுதீன் ஓவைசி, தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறினார்.
இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி
இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 5), உத்தரப் பிரதேசம் மாநிலம் பக்பட்டில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரையில் பேசியுள்ள ஓவைசி, “பாஜகவின் கண்களைப் பார்த்து உண்மையைச் சொல்லத் துணிந்ததால் அவர்கள் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்தான் மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள். ஒரு ஒவைசியைக் கொன்றால் லட்சக்கணக்கான ஓவைசிகள் பிறந்து வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.