Aran Sei

கோபேக் மோடி ட்வீட்: புகாரளித்த தமிழக பாஜக: பதிலடி கொடுத்துள்ள ஓவியா

இந்திய பிரதமரை அவமதித்ததாக குற்றம்சாட்டி, நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக புகாரளித்திருக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை ஓவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில், கோபேக் மோடி (#GobackModi) எனும் ஹேஷ்டேக்கின் கீழ், கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. அந்த ஹேஷ்டேக்கை (#GobackModi) நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் நிலையில், அவரது ‘கோபேக் மோடி’ பதிவை, தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளதுடன், 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஓவியாவின் கோபேக் மோடி ஹேஷ்டேக்: தேசதுரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் – காவல் ஆணையரிடம் புகாரளித்த தமிழக பாஜக

இந்நிலையில், தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர், பிரதமருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் நடிகை ஓவியா பதிவிட்டதாகவும், ஆகவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, காவல்துறையின் சைபர் பிரிவில் புகாரளித்தார்.

 

இந்நிலையில், நடிகை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில்,  கருத்துச் சுதந்திரம் (கருத்து சுதந்திரம் என்பது ஒரு தனி மனிதனுக்கு, சுந்திரமாக ஒரு உண்மையை, கருத்தை, பார்வையை வைத்திருக்க அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்) என்றும் ஜெய்ஹிந்த் என்றும் பதிவிட்டுள்ளார்.

பாஜக பிரமுகருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர் – வென்றது யார் ?

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கோபேக் மோடி என்று ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர், ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோபேக் மோடி ட்வீட்: புகாரளித்த தமிழக பாஜக: பதிலடி கொடுத்துள்ள ஓவியா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்