Aran Sei

தேச பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டால் பத்திரிகையார்கள் தனது அங்கீகாரத்தை இழக்க நேரிடும் – ஒன்றிய அரசு

“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றிற்குப் பாதகமாகவோ, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டாலோ பத்திரிகையாளர்கள் தங்களது அங்கீகாரத்தை இழக்க நேரிடும்” என்று இன்று (பிப்பிரவரி 15) அறிவிக்கப்பட்டுள்ள பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சியான பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் கீழ் 2400 அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்ளனர். இந்த 2400 பத்திரிக்கையாளர்கள் தங்களது அங்கீகாரத்தை இழப்பதற்கான 10 நிபந்தனைகளை இந்த புதிய விதிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

“மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்தல், பத்திரிகை அல்லாத வேலைகளுக்கு தன்னுடைய அங்கீகாரத்தைப் பயன்படுத்துதல், ஒரு பத்திரிகையாளர் மீது கடுமையான தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாலோ அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்றும்,  பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் “இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள்” என்று குறிப்பிடக்கூடாது என்று இந்த புதிய விதிகள் தடை செய்துள்ளன.

இணைய ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துடன் தங்கள் விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அவர்கள், ஒன்றிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் தகுதியைப் பெறுவார்கள்.

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கருப்பு பட்டை அணிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அந்தந்த இணைய ஊடகங்கள் குறைந்தது ஒரு வருடம் செயல்பட்டிருக்க வேண்டும், மேலும் பத்திரிக்கையாளர்கள் குறைந்தது இத்துறையில் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முந்தைய 6 மாதங்களில் குறைந்தது 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை தனிப்பட்ட பார்வைகளை அந்த பத்திரிக்கையாளர் பெற்றிருக்க வேண்டும்.

10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட இணைய ஊடகங்கள் 4 அங்கீகாரங்களைப் பெறத் தகுதியுடையவை. மேலும் அவை கடந்த 6 மாதங்களின் சராசரி மாதாந்திர பார்வையாளர் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்களின் வழியே சமர்ப்பிக்க வேண்டும்.

இணைய ஊடகங்கள் போலியான தகவல்கள், மோசடி செய்திருந்ததாகக் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : hindustantimes

தேச பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டால் பத்திரிகையார்கள் தனது அங்கீகாரத்தை இழக்க நேரிடும் – ஒன்றிய அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்