வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இந்தியச் சமூகம் அதிகாரம் செய்யும் ஆட்சியாளர்களை ஏற்பதில்லை. இந்தியாவில் “வேற்றுமையில் ஒற்றுமை” என்கிற செயல்பாடு தேவையின் காரணமாக பிறந்தது அல்ல, மாறாக “நமது நாகரிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அங்கம்” என்று ஆரிப் முகமது கூறியுள்ளார்.
வேத காலத்தில் கூட மொழிகளின் பன்முகத்தன்மை, பல்வேறு மத நம்பிக்கைகள், பக்தியின் வெளிப்பாடு ஆகியவை இந்தியாவில் இருந்தன. பின்னர், அது வலியுறுத்தப்பட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப்: கடவுள் ராமரை விமர்சித்த பேராசிரியர் – பணிநீக்கம் செய்த பல்கலைக்கழகம்
டெல்லியில் நடைபெற்ற கேபிட்டல் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். நீதிபதி (ஓய்வு) மதன் பி. லோகூர், நீதிபதி (ஓய்வு) ஜி. ரகுராம், டாக்டர் நரீந்தர் துருவ் பத்ரா, சேகர் குப்தா, பேராசிரியர் ரன்பீர் சிங், பேராசிரியர். என்.ஜி.ராஜூர்கர், டாக்டர். ஆர்.கே. மேன், பேராசிரியர். பி. ஈஸ்வர பட், நீதிபதி (ஓய்வு) அஜய் குமார் மிட்டல், டாக்டர். கே.ஒய். ராமச்சந்திர ராவ், பி.வி. ராஜகோபால், கணேஷ் சந்துரு, உதய் கோடக், த்வைபாயன் பட்டநாயக், மேஜர் ஜெனரல் (ஓய்வு) நரேந்திர கோட்வால், சி. ஹர்ஷவர்தன் ரெட்டி உள்ளிட்டவர்களுக்கும் மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த்தற்காக விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் தோலின் நிறம் வேறுபட்டது. அவர்களின் சடங்குகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டவை. அவர்கள் வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். இந்திய சமூகம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களை தங்கள் இலட்சியமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை வரையறுக்கும் அடிப்படையாக ஆத்மாவை (ஆன்மீகத்தை) இந்தியா உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா நேரங்களிலும், மதம், சாதி, சமூகம் போன்றவற்றின் மீது சண்டைகள் நமது பாரம்பரியத்தில் ஏற்பட்டதில்லை. சாதி, மத சண்டைகள் என்பது நமது பாரம்பரியம் கிடையாது. இந்தியா எப்போதுமே அறிவுக்கான நாகரீக தொட்டிலாக இருந்து வருகிறது. சரஸ்வதியை வழிபடுபவர்களாக இருந்தோம். ஆனால், சொந்த மக்களுக்கு அறிவை மறுத்தபோது வில்லன்கள் ஆனோம். நாம் நமது சமூகத்தை பலவீனப்படுத்திவிட்டோம். இது நாம் செய்த மிகப்பெரிய தவறு” என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
மரண படுக்கையிலிருந்து Congress எழுமா? | Nathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.