Aran Sei

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Image Credits: The Week

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது சுமார் 2,000 தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அந்த வாரியத்தில் தான் அவர்கள் இன்னமும் சம்பளம் பெற்று வருகின்றனர்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்

இந்த தொழிலாளர்களின் சம்பள விநியோகத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு மாற்றியதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்படுவோம் என்று அச்சப்படுகின்றனர்.

இதனை எதிர்த்தது போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு அதிமுக கட்சி ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றியதற்கு தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சென்னை: ‘குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்’ – கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் புதிய தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை தமிழ்நாடு வேலைக்கு எடுத்து வருவதாகவும், நிரந்தர வேலை தொழிலாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் புறத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்” என்று தனது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்