Aran Sei

தருமபுர ஆதீனத்தை சந்திக்க வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு – கறுப்புக் கொடி காட்டி போராட்டம்

யிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்றுள்ளது.

ஆளுநரின் தேனீர் விருந்து – விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம் புறக்கணிப்பு

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படுகிற, சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு நிர்வாகத்தை முடக்குகிற, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கும் விதமாக இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இணைந்து கறுப்புக் கோடி காட்டும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மட்டும்தான் அதிகாரமென்றால் சட்டமன்றம் எதற்காக? – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி

ஆளுநர் வருகையை ஒட்டி பாஜக துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தன் மயிலாடுதுறைக்கு 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க முனைவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

*********************                   **********************               **********************

இசைஞானி இளையராஜா மீது கொட்டப்படும் சாதிய வன்மம் – முற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார் எழுத்தாளர் கௌதம சன்னா

தருமபுர ஆதீனத்தை சந்திக்க வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு – கறுப்புக் கொடி காட்டி போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்