Aran Sei

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் கோல்வால்கரை புகழ்ந்த கலாச்சார அமைச்சகம் – அரசியல் கட்சிகள், நடிகர்கள் கண்டனம்

ர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்து விதமாக, “சிறந்த சிந்தனையாளர், அறிஞர், மதிக்கத்தக்க தலைவர்” என மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு, எதிர்கட்சிகள் மட்டுமல்ல பொது மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரதமரின் அலுவலகம், மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் பட்டேல் ஆகியோரை டேக் செய்து பதியப்பட்டிருந்த ட்விட்டரில், ”சிறந்த சிந்தனையாளர், அறிஞர், மதிக்கத் தக்க தலைவரான எம்.எஸ்.கோல்வால்கரை அவரது பிறந்தநாளில் நினைவுகூறுகிறோம். அவரது கருத்துகள் அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகத்தை வழங்குவதோடு, வழிகாட்டவும் செய்யும்” என அப்பதிவு தெரிவித்திருந்தது.

இந்த ட்விட்டர் பதிவிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், கௌரவ் கோகாய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ – திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்

“மத்திய கலாச்சார அமைச்சகத்தை யாரும் தீவிரமாக் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கும், அவர் (கோல்வால்கர்) சிறந்த சிந்தனையாளர் என்று நம்புவதற்கும், சான்றாக, #WhyIamAHindu வில் குறிப்பிடப்பட்டிருக்கும் (WhyIamAHindu நூல் சசித் தரூர் எழுதியது) கருத்துகளில் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறேன். இந்திய கொடியையும், அரசியலமைப்பயும் அவமதித்த ஒருவரை, இந்திய அரசாங்கம் பாராட்டுகிறது” எனச் சசி தரூர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய கலாச்சார அமைச்சகத்தை  தனது ட்விட்டர் பதிவில் டேக் செய்திருக்கும் கௌரவ் கோகாய், அந்தப் பதிவில், ”இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இடத்திற்கு இந்த அமைச்சரைப் (கலாச்சாரத் துறை) பிரதமர் மோடி தான் தேர்வு செய்தார். இதே அமைச்சர் தான் காந்தியை  கொன்ற நாதுராம் கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என நாடாளுமன்றத்தில் பேசினார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு எனக் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஊடக ஆலோசகர் நிதின் திரிபாதி, ”இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும், அனைவரின் பண்பாடுகள், பழக்கவழங்கங்கள் மற்றும் மதிப்புகளை இந்தியா மதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை – காரணம் என்ன?

“இந்தியா உலகில் மிகவும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட நாடு மற்றும் பன்முக கலாச்சாரத்தின் தொகுப்பு. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் எண்ணங்களையும் கலாச்சார அமைச்சகம் பிரதிபலிக்கிறது. தனித்துவமான சமூக- கலாச்சார பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்புகள் எல்லா நிலையிலும் மதிக்கப்பட வேண்டும், இது ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகளில் ஒன்றாகும். ” என்றும் அவர் கூறினார்.

கலாச்சார அமைச்சகத்தின் இந்த ட்விட்டர் பதிவிற்கு இந்தி திரையுலக நடிகைகள் ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சத்தா உள்ளிட்ட பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிகள் தான் காரணம் – நாடாளுமன்ற குழு தலைவர் ரமேஷ் பிதுரி குற்றச்சாட்டு

“இது போன்ற அமைச்சகத்தில், ஒருகாலத்தில் பணிபுரிந்ததற்கு வெட்கப்படுகிறேன்” என்று கலாச்சார அமைச்சகத்தின் முன்னாள்  செயலாளராகப் இருந்த ஜவஹர் சிர்கார் தெரிவித்துள்ளார்.

”ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை இந்திய கலாச்சார அமைச்சகம் தவறாகப் புகழுவதைக் கண்டு, முன்னாள் கலாச்சார செயலாளராக நான் வெட்கப்படுகிறேன். காந்தியின் சுதந்திர போராட்டத்தை கோல்வல்கர் & ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எதிர்த்தனர். கோல்வல்கர் தனது ‘எண்ணங்களின் தொகுப்பில்’ (Bunch of Thoughts) இந்தியாவின் மூவர்ணத்தையும் எதிர்த்தார். சர்தார் படேல் அவரைச் சிறையில் அடைத்ததோடு, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் தடை செய்தார்” என கலாச்சார அமைச்சகத்தின் முன்னாள்  செயலாளர் ஜவஹர் தனது ட்விட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் கோல்வால்கரை  புகழ்ந்த கலாச்சார அமைச்சகம் – அரசியல் கட்சிகள், நடிகர்கள் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்