ஆளும் அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை (ED) நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தயாராக இருப்பவர்கள் எந்தத் தேர்வுக்கும் பயப்படத் தேவையில்லை. ED என்றால் Examination in Democracy என்று புதிய பொருள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
“ஆளும் அரசாங்கம் தோல்வியுற்றால் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசாங்கம் தோல்வியுறும்போது எதிர்க்கட்சிகளை தேர்வெழுத நிர்பந்திக்கிறது. நன்றாகத் தயார் செய்தவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது வாய்மொழித் தேர்வுகளுக்குப் பயப்பட மாட்டார்கள். நீங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம்” என்று அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது – திரைக் கலைஞர் சாய் பல்லவி கருத்து
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Source: newindianexpress
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு | மோடியின் இன்னொரு வித்தை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.