Aran Sei

பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை – எதிர்கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தை

Opposition leaders

ரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையில், 11 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாய சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, எதிர்கட்சிகள் கூடவுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் ஜனவரி 29ஆம் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களையும் கடந்து தொடர்ந்து வருகின்றது.

ஆகவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து, அவர்களிடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தி இந்து கூறுகிறது.

‘மொத்த நாடும் உங்களுக்கு நன்றி சொல்லும்’ – பிரதமரின் தாயாருக்கு எழுதப்பட்ட பஞ்சாப் விவசாயின் கடிதம்

இதன் தொடக்கமா, இடதுசாரிகளின் கூட்டமைப்பு சார்பாக, விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கூட்டறிக்கை விடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்), அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசியலிச கட்சி ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களையும், 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, போராடும் விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதியளித்தது. இதுகுறித்து அந்த கூட்டறிக்கையில், “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு, குடியரசு தலைவர் கையெழுத்திட்டு, அது அரசிதழில் வெளியான பிறகு, அதை நிறுத்தி வைக்க முடியாது. அதை திரும்ப பெறாதவரை அந்த சட்டம் நடைமுறையில்தான் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காகத்தான், புதிய சட்டங்களை கொண்டு வரும் முன், விவசாயிகள், அந்த சட்டம் தொடர்பான நபர்கள் மற்றும் மாநில அரசுகளுடன், மத்திய அரசு கலந்து பேச வேண்டும் என்று வலியுறுத்துவதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி

“போராட்ட இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவும், மதசார்பாற்ற, ஜனநாயக அரசியல்சாசனத்தை பாதுகாக்கவும், குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணியை நடத்தியே தீருவோம் என்ற அவர்களின் (விவசாயிகளின்) தேசப்பற்றுடன் கூடிய மன உறுதியை நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்று இடதுசாரிகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு அரசியல் சாயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, எதிர்கட்சிகள் அனைத்தும் போராட்டக் களத்திலிருந்து இதுவரை விலகியே உள்ளன. இவ்வாறே இருப்பது நல்லது என்றும் அதேவேளை, விவசாயிகளின் கோரிக்கையை வெல்வதற்கு எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்றும் ஒரு மூத்த எதிர்கட்சித் தலைவர் கூறியதா தி இந்து தெரிவிக்கிறது.

அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம். 

பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை – எதிர்கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்